Advertisment

'திருச்சி வேலுச்சாமி மீது நடவடிக்கையா?'-செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

611

SELVAPERUNTHAGAI Photograph: (congress)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். காங்கிரஸில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சு எழுந்துள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்த கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதிலளிக்கையில், ''அவரவருக்கு ஒரு கருத்து இருக்கிறது. முடிவெடுக்க போகிறவர்கள் எங்களுடைய அகில இந்தியத் தலைமையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையும் தான். நாங்கள் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். சோடன்கர் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளார்கள். மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவோம். இந்த பேச்சுவார்த்தையில் எல்லாம் சுமுகமாக முடியும் என்று முழுமையாக நாங்கள் நம்புகிறோம்''என்றார்.

Advertisment

'இந்த குழுவை திருச்சி வேலுச்சாமி கடுமையாக விமர்சிக்கிறார். உங்களையும் சேர்த்து விமர்சிக்கிறார்?' என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''திருச்சி வேலுச்சாமி யாரை விமர்சிக்கவில்லை சொல்லுங்கள். அவர் விமர்சிக்கத்தவர் யார்? ஒருவரை சொல்லுங்கள். பெரியாரை விமர்சிக்கிறார். பேரறிஞர் அண்ணாவை விமர்சிக்கிறார். கலைஞரை விமர்சிக்கிறார்.  எங்களையும் விமர்சிக்கிறார். எங்களை விமர்சிப்பதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எவ்வளவோ விமர்சனங்களை பார்த்துட்டு வந்திருக்கிறோம். எதற்கு இப்படில்லாம் விமர்சிக்க வேண்டும். யாருக்காக பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒன்று காங்கிரஸ்  கட்சிக்காக பேசணும். கட்சிக்காக எங்க பேசணும்? கட்சி தலைவரிடம் பேச வேண்டும். இங்கு  உங்களுக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் அகில இந்திய தலைவர் கிட்ட பேசணும். கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு இப்படி எல்லாம் பேசுவது எந்த விதத்தில் நியாயம்'' என்றார்.

'திருச்சி வேலுச்சாமி மீது நடவடிக்கை எடுப்பீர்களா?' என்ற கேள்விக்கு, 'அது குறித்து  அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும். தகவல்களை எல்லாம்  சேகரித்துக் கொண்டு இருக்கிறார்கள்' என்றார்.

dmk congress Selvaperunthagai velusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe