கிராமங்களில்கூட காலை நேரங்களில் தனியார் பள்ளி வாகனங்களின் அணிவகுப்பு அதிகம். குறிப்பிட்ட நேரங்களுக்குள் பள்ளிக்குப் போக வேண்டும் என்பதற்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் செல்லும் பள்ளி வாகனங்களும் உண்டு. 

Advertisment

இந்நிலையில் இன்று காலை அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் பெருங்காடு பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பள்ளி வேன், கூத்தங்குடி கிராமத்திற்கு அருகில் முன்னால் சென்ற மற்றொரு பள்ளி வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தைகள் அதிர்ச்சியடைந்து கதறியுள்ளனர்.

Advertisment

இந்த விபத்தில் 5 மாணவ-மாணவியர் காயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆவுடையார்கோயில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.