இந்தியா முழுவதும் இன்று (20-10-25) தீபாவளி பண்டிகை உற்சாகத்துடனும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால், இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு தனது குடும்பத்துடன் கடை உரிமையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை விளாங்குடி ராமமூர்த்தி நகர் பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், இன்று திடீரெனன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ, மளமளவென பரவி கடை முழுவதும் பரவி கரும்புகை வானை முட்டும் அளவிற்கு எழுந்துள்ளது. இதனால், அருகில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வருவதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த தீ விபத்து நடந்திருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.