திமுக எம்.எல்.ஏவின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

Advertisment

இந்த நிலையில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டச் செயலாளருமான துரை சந்திரசேகரன் என்பவர் ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது காரில் தஞ்சாவூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதனிடையே, தென்னமநாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் தனது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே எதிரே வந்த இரு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கோவிந்தராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்துடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு காவல்துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், உடனடியாக வந்த ஆம்புலன்ஸில் கோவிந்தராஜின் உடல் ஏற்றப்பட்டு ஒரத்தநாடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து, அங்கு வந்த ஒரத்தநாடு காவல்துறையினர், எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனின் காரை பறிமுதல் செய்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment