புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் 800 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகையுடன் மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. இந்த பழமையான ஆலயம் 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு 84 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிவன் சிலை மற்றும் தலைமைப்புலவர் நக்கீரர் சிலையும் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
மிகப்பழமையான மெய்நின்றநாத சுவாமி ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் வழிபாடுகள் நடத்தப்படுவதுடன் பிரதோசம், உள்பட சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடக்கிறது. அதே போல ஒவ்வொரு மாதமும் சிறப்பு அலங்காரங்களுடன் வழிபாடுகளும் நடத்தப்படுவதால் வெளியூர் பக்தர்களும் ஏராளம் கலந்து கொள்கின்றனர். அதே போல, இன்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பிரமாண்ட லிங்கத்திற்கு அன்னத்தால் உருவம் கொடுத்து, காய், கனி, மலர்களால் தோரணங்களாக அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.
இந்த விழாவில் கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் பௌர்னமி கிரிவலமும் நடந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/abhi-2025-11-05-22-21-00.jpg)