தலைநகர் டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 10 வருடமாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, ஆம் ஆத்மி டெல்லிக்கு எதுவும் செய்யவில்லை எனவும் அதனை பா.ஜ.க தலைமையிலான டெல்லி அரசு தீர்த்து வைக்கப்போவதாகவும் முதல்வர் ரேகா குப்தா தொடர்ந்து கூறி வந்தார்.

Advertisment

அதன்படி, டெல்லியில் முக்கிய நதியாக இருக்கும் 52 கி.மீ பாயும் யமுனை நதியை சுத்திகரிக்கும் பணியை ரேகா குப்தா சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். டெல்லியில் பெரும்பகுதியாக இருக்கும் பூர்வாஞ்சல் பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சத் பூஜையைம் யமுனை நதியில் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகை முடிந்து 6 நாட்கள் கழித்து மூன்று நாட்கள் விரதம் இருக்கும் பெண்கள், யமுனை நதியில் பூஜை செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். யமுனை நதியில் நிறைந்திருக்கும் கழிவுகள், அழுக்குடன் நிறைந்த நுரைகளுடன் கூடிய தண்ணீரில் நின்றவாறு பெண்கள் பூஜை செய்து வருகின்றனர்.

Advertisment

அதனை போக்கும் விதமாக, இந்தாண்டு கொண்டாடப்படும் சத் பூஜைக்காக யமுனை நதியை சுத்திகரிக்கும் பணியை தொடங்கியிருப்பதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா குறிப்பிட்டார். அதன்படி, யமுனை நதியில் சுத்திகரிப்பு பணி விரைவாக நடைபெற்று நிறைவுபெற்றதாகக் கூறபப்டுகிறது. ரேகா குப்தாவின் இந்த நடவடிக்கைக்காக பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதன்படி, பா.ஜ.க அரசாங்கத்தின் கீழ் யமுனை நதி சுத்தம் செய்யப்பட்டு சத் பூஜைக்கு ஏற்றது என என பா.ஜ.கவினர் உறிதி அளித்தனர்.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி தலைவர்கள் யமுனை ஆற்றில் இருந்து சேகரித்த அசுத்தமான தண்ணீர் பாட்டிலை எடுத்து முதல்வர் ரேகா குப்தாவின் இல்லத்திற்கு வந்தனர். அப்போது ஆளும் கட்சி, யமுனை நதி சுத்தம் செய்யப்பட்டதாக நம்பினால் இதை குடிக்குமாறு அவர்கள் சவால் விடுத்தனர். இது தொடர்பான வீடியோவில், ஆம் ஆத்மியின் டெல்லி பிரிவித் தலைவர் சவுரப் பரத்வாஜ், அசுத்தமான தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலை உயர்த்திக் காட்டி, ‘இது டெல்லி வழியாகப் பாயும் யமுனையிலிருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர். இந்த தண்ணீரை ரேகா குப்தாக்கு வழங்க விரும்புகிறோம். யமுனை சுத்தமானது என்று அவர் சொன்னால், அவர் அதைக் குடிக்க வேண்டும்’ என்று கூறினர். அசுத்தமான தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்த முதல்வர் ரேகா குப்தா வீட்டின் முன்பு கூட்டமாக ஆம் ஆத்மி தலைவர்கள் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Advertisment