புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிவன் சிலை மற்றும் தலைமைப் புலவர் நக்கீரர் சிலை அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்ற நாதர் சுவாமி ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, கடந்த சில வாரங்களாக ஆடி மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அதாவது ஒப்பிலாமணி அம்பிகைக்கு மஞ்சள் அலங்காரம், ஆயிரக்கணக்கான வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

அதேபோல இன்று வெள்ளிக்கிழமை ஒப்பிலாமணி அம்பிகைக்கு நூற்றுக்கணக்கான பட்டுப் புடவைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இந்த வழிபாடுகளில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.