ஆதார் எண்ணுடன் பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. அதற்கு கால அவகாசமும் அளித்து, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியிருந்தது. இந்த காலக்கெடு  டிசம்பர் 31, 2025 அன்று முடியவுள்ளது. இந்நிலையில், இதுவரை ஆதார் எண்ணுடன் பான்  எண்ணை இணைக்காதவர்கள் தற்போது என்ன செய்வதென்று தவித்து வருகின்றனர். 

Advertisment

இந்த மாத இறுதிக்குள் பான் என்னை ஆதார் என்னுடன் இணைக்கத்  தவறினால், ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் அட்டை செயலிழந்துவிடும். அப்படியாக பான் எண் செயலிழக்கும்பட்சத்தில் எந்த ஒரு பணப்பரிமாற்றமும் செய்ய முடியாமல் போகும். மேலும் அபாரதத் தொகையும் செலுத்த நேரிடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, வருமான வரித் தாக்கல் செய்தல், வரித் திரும்பப் பெறுதல் போன்ற செயல்பாடுகளை செய்ய முடியாமல் போகும். 

Advertisment

அதுமட்டுமல்லாமல் அபாரதத்தினால் உங்களுக்கு பண இழப்பு ஏற்படுவதோடு, உங்களால் வேறு எந்தவொரு பணப்பரிவர்த்தனை சார்ந்த செயல்களையும் செய்ய முடியாமல் போகலாம் எனக்  கூறப்படுகிறது. இந்த இணைப்பு, வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உதவுகிறது மற்றும் வரி இணக்கத்திற்காக ஒரு ஒருங்கிணைந்த அடையாளத்தை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது. 

aadhaar-model

எனவே தான் அரசு பான் மற்றும் ஆதார் இணைப்பை கட்டாயம் எனக் கூறுகிறது. இந்த இணைப்பை இந்த மாத இறுதிக்குள் முடிக்காதவர்களின் பான் எண் செயலிழந்ததாக அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே அனைவரும் பான் மற்றும் ஆதார் இணைப்பை உனடடியாக செய்வது, அபராதம் மற்றும் பிற சிக்கலிருந்து நம்மை பாதுகாக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisment