மத்தியப்  பிரதேச மாநிலம் போபாலில் கவிதா (வயது 23) எனும் இளம் பெண் சமீபத்தில் காணாமல் போனார். இதனால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அதோடு அவரது குடும்பத்தினர் கவிதாவைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் கவிதா கிடைக்கவில்லை.  அதன் பின்பு தான் அவர்களுக்கு, கவிதா தன் காதலனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த குடும்பத்தினர், தங்கள் மகள் இறந்துவிட்டதாகக் கூறினர். 

Advertisment

அதோடு விடாமல் தங்கள் மகளைப் போன்ற உருவத்தில் ஒரு பொம்மையைச் செய்து அதற்கு இறுதிச் சடங்கு நடத்தினர். அந்த பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தி, மயானத்தில் பொம்மையைச் சிதையில் வைத்து தீ வைத்தனர். மேலும் இறுதிச் சடங்குகளும் நடத்தப்பட்டன. இது குறித்து கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம்பாபு குஷ்வாஹா, “எங்கள் மகள் செய்த இத்தகைய காரியத்தால் எங்கள் குடும்பம் நிலை குலைந்து நிற்கிறது. 

Advertisment

இந்த சம்பவம் எங்கள் வாழ்வின் மிக மோசமான சம்பவம். இதனை ஒரு போதும் எங்களால் ஏற்கமுடியாது” என்று கூறினார். மகளின் உருவ பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தி, மயானத்தில் தீ வைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு, குடும்பமே சேர்ந்து இறுதிச் சடங்கை நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.