A young woman was extorted money by promising to marry her
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வாக்காட் பகுதியை சேர்ந்தவர் ரம்யா (28, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ரம்யா திருமணம் செய்ய முடிவு செய்ததையடுத்து, தனக்காக வரன் தேடியுள்ளார். இதன் காரணமாக, கடந்த 2024 ஆம் ஆண்டு திருமண தகவல் இணையதளத்தில், தனது விவரங்களைப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, சில மாதங்கள் கழித்து அலிபாக் பகுதியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் ரம்யாவை போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஜெயேஷ் பாட்டில் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிவதாகத் தெரிவித்தார். இதனை நம்பிய ரம்யாவும், திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஜெயேஷ், ரம்யாவிடம் இருந்து பல்வேறு சயங்களில் பணம் பெற்றுக் கொண்டிருந்துள்ளார். அதன் மொத்த தொகையின் மதிப்பு 43 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெயேஷ், தான் வாங்கிய பணம் அனைத்தையும் தங்களது, எதிர்கால வாழ்விற்கு முதலீடு செய்து வருவதாக ரம்யாவிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த சந்திப்புகளில் ஜெயேஷ் மீது ரம்யாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. பின்னாளில், அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்பதை அறிந்து கொண்ட ரம்யா, இது குறித்து வாக்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த, காவல்துறையினர், ஜெயேஷ் எனப்படும் ஆதர்ஷ் மாத்ரா என்பவரைக் கைது செய்தனர். பின்பு, நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ரம்யாவிடம் 2024 முதல் 2025 ஆண்டுகால இடைவெளியில் 43 லட்சம் பணத்தைப் பெற்று, கோவாவிற்குச் சென்று சொகுசு வழக்கை வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடமிருந்து 16.65 லட்சம் பணத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மீதமுள்ள பணத்தை பெரும் முயற்சியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் லட்சக்கணக்கில் பணமோசடி செய்துள்ளது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us