Advertisment

போலீசாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு!

siren-arrested

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சீயோன் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதாவது இந்த சம்பவத்தில் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் அழகர் ஆகிய இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த இருவரும்  சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

Advertisment

இந்த சி.சி.டி.வி. காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில், இருவர் ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியும் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் மற்றொருவரைத் துரத்தும் காட்சியும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கைது செய்ய முயன்ற போது போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆகாஷுக்கு கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் மதுரை அரசு ராஜ மருத்துவமனையில் காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து  விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrested police manamadurai sivagangai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe