சென்னை கொடுங்கையூர் அருகே உள்ள சோலையம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் அருள். இளைஞரான இவர் கடந்த 5ஆம் தேதி (05.12.2025) கொடுங்கையூர் அருகே உள்ள என்.எஸ்.கே. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வெறிபிடித்த தெரு நாய் ஒன்று அருளைப் பலமாகக் கடித்துள்ளது. 

Advertisment

இதில் பலத்த காயமடைந்த அருளைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள் சிகிச்சை மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டர். அவ்வாறு செல்லும் வழியில் அருள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

வெறிநாய் கடித்து, சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு (2025) மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த ஆண்டு (2024) 4.8 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.