Advertisment

திருவள்ளூரில் மீண்டும் ஒரு சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்-வடமாநில இளைஞர் கைது

a4622

A young man from the northern state was arrested for assaulting a minor girl again in Thiruvallur Photograph: (police)

அண்மையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி வடமாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 14 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ராஜு பிஸ்வ கர்மா என்ற நபர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் கஸ்டடியில் விசாரணையில் உள்ளான்.

Advertisment

இந்நிலையில் திருவள்ளூரில் மீண்டும் சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருப்பது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருத்தணியில் உள்ள கிராமத்தில் பாலம் கட்டும் பணியில் பல வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 17 வயது சிறுமியை அங்கு பணிபுரிந்து வரும் வடமாநில இளைஞர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மீண்டும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

thiruthani Child Care thiruvallur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe