கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள முல்லை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளிக்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்று கதவை மூடியுள்ளனர். இதனை பார்த்து சந்தேகமடைந்த மாணவர்கள்.. உடனடியாக அங்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நபரிடம்.. இங்க என்ன பண்றீங்க என மாணவர்கள் கேட்க, ஏதோ பண்ணிட்டு போறேன் போடா என துரத்துயிருக்கிறார். அதற்கு மாணவர்களும் நீங்க யாரு என்று கேட்டபோது, " என்ன பார்த்ததில்லையா, நான் இந்த ஸ்கூல் எஸ்.எம்.சி., பிரசிடெண்ட். என்று தெரிவித்தார். தொடர்ந்து கீழே வந்த அந்த நபரிடம் மாணவர்கள்.. யார் அந்த பொண்ணு என கேட்க, "என்ன பண்ணுவியோ பண்ணிக்கோங்கடா.. நாளைக்கே ஆமா நான் பண்ணேன்னு ஒத்துகிட்டாலும், யாரும் என்ன எதுவும் பண்ண முடியாது என திமிரமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் ஒன்றுசேர்ந்து.. "இது ஸ்கூலா இல்லா லாட்ஜா? நீங்க ஸ்கூல்க்குள்ள அந்த வேலை பண்ணது தப்பா இல்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நபர், "சரி என்னவோ பண்னுங்கடா.. ஸ்கூல் சாவி மொத்தமும் என்கிட்ட தான் இருக்குது.. முடிஞ்சத பாத்துக்கோங்கடா எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையில், வகுப்பறையில் இருந்த அந்த பெண்ணை நைசாக போன் பேசியவாறே அனுப்பி விடுகிறார். இவை அனைத்தையுமே அந்த மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது சம்பந்தமாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனிராஜ், சம்மந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று.. தலைமை ஆசிரியர் காந்தி மற்றும் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
அதில்.. வீடியோவில் சிக்கிய நபர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாவின் கணவர் உமேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், உமேஷ் மற்றும் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்ய ஒரு பெண்ணை அழைத்து வந்ததாகவும், அதனை மாணவர்கள் வீடியோ எடுத்து பெரிதாக்கிவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதனிடையே, பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக தலைமை ஆசிரியர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/01/untitled-1-2025-11-01-18-04-45.jpg)