Advertisment

வாழை நாரை கிணற்று நீரில் நனைக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

806

A woman who tried to dip a banana in well water suffered a tragic accident Photograph: (police)

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சீதாலந்தூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ருக்மணி. இவரது கணவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். ருக்மணிக்கு முத்துக்குமார் மதன்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுடன் வசித்து வந்தார். ருக்மணி ஈரோடு சுண்ணாம்பு ஓடை அருகே உள்ள லோகநாயகி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ராமசாமி என்பவர் வாழை தோப்பை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

Advertisment

அவரிடம் ருக்மணி இலை அறுக்கும் கூலி வேலை பார்த்து வந்தார். இதற்காக ருக்மணி தினமும் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடுக்கு வந்து மீண்டும் வேலை முடிந்ததும் இரவு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து ஈரோட்டுக்கு வேலைக்கு ருக்மணி வந்துள்ளார். நேற்று மாலை ருக்மணி வாழைத்தோப்பில் உள்ள கிணற்றில் இறங்கி தண்ணீரில் வாழை நாரை நனைத்த போது திடீரென அவர் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ளவர்கள் ஓடிச்சென்ற கிணற்றில் விழுந்த ருக்மணியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது ருக்மணி மயங்கி நிலையில் கிடந்தார்.

Advertisment

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ருக்குமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ருக்மணி உடலை பார்த்து மகன்கள் அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Police investigation Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe