மயிலாடுதுறை, கண்டியூர் கிராமத்தில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் இருந்து பெண் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு பதறிப்போன ஊர் மக்கள் சத்தம் கேட்ட வீட்டை வந்து பார்த்தனர். அப்போது, அந்த வீட்டின் உரிமையாளர் பிரேமா எனும் இளம் பெண் தீயில் எரிந்த படி, வலி தங்க முடியாமல் கத்தினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் தீயை அணைத்து அவசர ஊர்தியை வரவைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது சம்பந்தமாக காவல் துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர், அப்போது அந்த கிராம மக்களிடம் விசாரித்த போது பிரேமாவும் அவரது கணவர் ஆதித்யனும் நீண்ட நேரம் சண்டை போட்டு கொண்டிருந்ததாகவும், பின்பு சிறிது நேரம் கழித்து பிரேமா அலறல் சத்தம் கேட்டதாகவும், அப்போது வந்து பார்த்த போது, அப்பெண் எரிந்து கொண்டிருந்ததாகவும் மக்கள் கூறினார். இதனைத் தொடர்ந்து கொல்லைப்புறத்தில் ஒளிந்திருந்த அவரது கணவன் அகத்தியனை கைது செய்த காவலர்கள், மேலும் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவர் கூறிய தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அகத்தியனும் பிரேமாவும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதோடு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், அகத்தியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அகத்தியன் வேலைக்குச் செல்லாமல் போன் பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதோடு எந்நேரமும் குடி போதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரேமா அவரை கண்டித்துள்ளார். அதோடு தங்களின் குழந்தையின் எதிர்காலத்தை பற்றியும் அவரிடம் கவலையுடன் பேசியுள்ளார். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத அகத்தியன் வழக்கம் போல வேலைக்கு செல்லாமல் போன் பேசுவதிலேயே பொழுதை கழித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் குடிபோதையில் வந்த கணவனை மீண்டும் கண்டித்துள்ளார் மனைவி பிரேமா. இதனால் ஆத்திரமடைந்த அகத்தியன் தன் மனைவியை கண்முடித்தனமாக சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதோடு நிற்காமல் வண்டியில் வைத்திருந்த, கேனிலிருந்த டீசலை பிரேமா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பிரேமா உடல் முழுவதும் பற்றி எரிந்ததால், அவர் வலி தங்க முடியாமல் கதறிய சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் . பிரேமா மருத்துவமனையில் 70% காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். மனைவி மீது டீசலை ஊற்றி தீ வைத்த அகத்தியனை காவல்துறையினர் சிறையிலடைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us