நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

Advertisment

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று குருபூஜை நடந்து வருகிறது. இதற்காக கோயம்பேடு தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகே இருந்து விஜயகாந்தின் நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது. விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருடைய நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருவதாலும் பேரணி காரணமாகவும் சுமார் 800 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் நேரில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, சீமான், உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் மரியாதை செலுத்தியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நான் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதர். குறுகிய காலமே ஆனாலும் அவருடன் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை. மனித நேயத்தின் சிகரமாக திகழ்ந்தவர். ஆண்டுகள் கடந்தாலும் மனித நேயத்திற்காக என்றென்றும் தமிழ்நாட்டு மக்களால் அவர் நினைவுகூறப்படுவார்' என தெரிவித்துள்ளார். 

Advertisment