மதுபான கூடத்திற்கு எதிராக தவெக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் தவெக தொண்டர் ஒருவர், காவலரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடி பகுதியில் புதிதாக நவீன வசதி கொண்ட சொகுசு மதுபானம் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபான கூடத்துக்கு அருகில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இதனால், பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று பலர் அந்த மதுபான கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அதன்படி, இந்த மதுபான கூடத்தை அகற்ற வேண்டும் என தவெக சார்பில் இன்று (07-12-25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மதுபானக் கூடம் முன்பு காவல்துறையினர் கயிறு கட்டி தடுப்புகள் அமைத்திருந்தனர்.

இந்த நிலையில், அந்த தடுப்பை மீறி மதுபானக் கூடத்துக்குள் நுழைந்து தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதில் போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தவெக தொண்டர் ஒருவர், தலைமை காவலர் அருள் என்பவரின் கையை கடித்தார். இந்த செயல், காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Advertisment