Advertisment

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

car


திருப்போரூர் அருகே சாலை விபத்து அதிவேகமாக காரில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவர் பலி 3 பேர் உடல் நசுங்கிய நிலையில் மருத்துவ மனையில்  கவலைக்கிடம் திருப்போரூர் போலீசார் விசாரணை 

Advertisment

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மகன் அபிநந்தன் (22), சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.  இவரும் இவருடன் எம்.பி.பி.எஸ். படிக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த செண்பக விநாயகம் (வயது 23), அதே கல்லூரியில் அலைட் ஹெல்த் சயின்ஸ் 4ஆம் ஆண்டு படிக்கும் கேரளாவைச் சேர்ந்த முகமது அலி (வயது 21), நவ்யா (வயது 21), வேலூரைச் சேர்ந்த மிஸ்பா பாத்திமா (வயது 21) ஆகியோரும் மேலும் 5 மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் இரண்டு கார்களில் நேற்று இரவு மாமல்லபுரம் சென்றனர். அங்கு இரவு விருந்தில் கலந்து கொண்டு விட்டு கடற்கரைக்கு சென்றனர். அங்கு நள்ளிரவு வரை இருந்து விட்டு அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு குரோம்பேட்டை நோக்கி இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்தனர். திருப்போரூர் புறவழிச்சாலையில் இரு கார்களும் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. 

Advertisment

அப்போது திருப்போரூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விறகு ஏற்றி வந்த லாரியின் பின் பக்கத்தில் மருத்துவ மாணவர்கள் பி.எம்.டபிள்யூ கார் பலத்த வேகத்துடன் வந்து மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி கூச்சலிட்டனர்.  

இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருப்போரூர் போலீசார் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் காரை வெளியே எடுத்து காருக்குள் சிக்கி இருந்த 5 பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் காருக்குள் இருந்த மருத்துவ மாணவி மிஸ்பா பாத்திமா (வயது 21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் பலத்த காயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரில் இருந்த 4 பேரில் 3 மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விறகு ஏற்றி வந்த லாரி கடலூர் மாவட்டம் பின்னலூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பருக்கு சொந்தமானது ஆகும். இந்த லாரி கடலூர் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு விறகு ஏற்றிக் கொண்டு சென்று இருந்தது. திருப்போரூர் புறவழிச்சாலையில் ஓய்வு எடுப்பதற்காக நிறுத்தி இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. லாரியை ஓட்டி வந்த கடலூரைச் சேர்ந்த ஓட்டுனர் சுபாஷ் (40) என்பவரை திருப்போரூர் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident thiruporur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe