சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணி நடைபெறும் பகுதியில் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர், தனது மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தை என குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த ஒரு கும்பல் அவரது மனைவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளது. மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தை என மொத்த குடும்பத்தையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த சடலங்களை வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக வீசி சென்றுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு குப்பைப் பகுதியிலிருந்து ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சடலம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு, அதனடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் சடலமானது கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மனைவியின் சடலத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிகாரை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சிலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையார் தனிப்படை போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். சிக்கந்தர் (33), நரேந்திர குமார்( 45), நவீந்திரநாத் (45), பிகாத் (24) ஐந்தாவது நபரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. இந்த நபர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/28/753-2026-01-28-17-21-41.jpg)