A T20 Tiger again? - The Nilgiris lost their composure Photograph: (nilgiri)
உதகையில் புலி தாக்கி பழங்குடியைச் சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில் புலியை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் எட்டாவது மையில் பகுதியை அடுத்துள்ள சின்னக்காடிமந்தூர் என்னும் தொடர் பழங்குடியின மக்கள் வசித்து வரும் பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தால் குட்டன். இவர் நேற்று தோட்டத்திற்கு வேலைக்கு சென்று அடுத்த நாள் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.
தோட்டத்தில் முஸ்தால் குட்டன் பணியாற்றி வந்ததால் வனவிலங்குகள் தாக்குதலுக்கு அவர் உள்ளாகி இருக்கலாம் என்ற அடிப்படையில் வனத்துறையினரிடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் தேடி வந்த நிலையில் காடிமந்து என்ற வனப்பகுதி அருகே உடல் சிதைக்கப்பட்ட நிலையில் முஸ்தால் குட்டன் சடலமாக கிடந்தார். உடல் முழுவதும் காயங்கள் இருந்ததன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் புலி தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
அப்பகுதியில் வனவிலங்குகள் தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர்கதையாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி அவரின் உடலை வாங்க மறுத்து தொடர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை அந்த பகுதி மக்கள் வைத்துள்ளனர்.புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும், கேமராக்கள் வைக்க வேண்டும். யானை போன்ற விலங்குகளும் ஊருக்குள் வருவது அச்சத்தை ஏற்படுத்துவதால் அகழியைப் பெரிது படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நீலகிரி மாவட்டத்தில் தேவன் எஸ்டேட் பகுதியில் புலி ஒன்று 4 பேரை கொன்ற நிலையில் ஆட்கொல்லி புலியாக கருதப்பட்ட டி20 புலியை பல நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி ஒருவழியாக பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us