தமிழக அரசு மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த மாதத்தில் 5,000 ரூபாயாக மகளிருக்கு வங்கிக்கணக்கில் கடந்த 13 ஆம் தேதி வரவு வைக்கப்பட்டது. அதாவது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், கோடைக்கால சிறப்புத் தொகுப்பும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்குப் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, திமுக மகளிர் அணியினர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரசு வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்பட்ட பணத்தை, கையில் காண்பித்தபடியே பெண்கள் அறிவாலயத்தில் குழுமினர். அதுபோக, திமுகவினர் இந்த அறிவிப்பைக் கொண்டாடும் விதமாகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதேநேரம் தேர்தலையொட்டி திமுக அரசு இப்படி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பரவிய ஒரு வதந்தியால் பெண்கள் பலரும் வங்கியில் முண்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் தமிழக அரசால் பெப்சிட் செய்யப்பட்ட மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் திரும்ப பெறப்பட இருக்கிறது என்ற வதந்தி பரவியது. இதனால் உடனடியாக அந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக தங்கள் உரிமைத் தொகை பணத்தை எடுத்துக் கொடுங்கள் என இந்தியன் வங்கி முன்பு குவிந்தனர் காலை வேளையிலேயே குவிந்தனர். பின்னர் வங்கி திறந்த உடனே முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்ற பெண்கள், தங்களுடைய உரிமை தொகை பணத்தை பெற்றுச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/16/b17-2026-02-16-17-06-29.jpg)