மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் வசித்து வருபவர் முத்துசாமி. இவரின் மகன் செந்தில் (வயது 8) ஆவார். இந்நிலையில் செந்தில் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள காம்பவுண்ட் கதவு வழியே உள்ளே வந்த தெருநாய் ஒன்று சிறுவனைக் கடித்தது. அச்சமயத்தில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு சிறுவனின் தந்தையும், தாயும் அங்கு வந்து சிறுவனைக் காப்பாற்றினர். அதே சமயம் சிறுவனின் குடும்பத்தினரையும் நாய் கடித்தது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெருநாய் ஒன்று சிறுவனைக் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சிறுவன் செந்திலின் கை, கால் மற்றும் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.