உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாரில் ஆறு வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் புகாரளித்த சிறுமியின் தந்தை, தனது மகள் மாடியில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பிறகு பார்க்கும் போது கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள ஒரு வயல்வெளியில் கிடந்ததாகவும் அவர் கூறினார். மேலும் தனது புகாரில், ராஜு மற்றும் வீரு காஷ்யப் என்ற இரண்டு பேர் அதே கட்டிடத்தில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும், அந்த இரண்டு பேரும் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரையடுத்து, சிகந்திராபாத் காவல்துறை பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 70 (2) மற்றும் 103 (1) மற்றும் போக்ஸோ சட்டத்தின் (POCSO) பிரிவுகள் 5(எம்) மற்றும் 6 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மூத்த காவல் கண்காணிப்பாளர் குற்றவாளிகளைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்துள்ளதாகக் கூறினார். சந்தேகிக்கப்படும் நபர்கள் கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இத்ரீஸ் என்பவரின் இடத்தில் பதுங்கியிருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறை அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தது. இந்த சமயத்தில் ​​குற்றவாளிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காவல்துறை பதிலடி கொடுத்ததில், என்கவுண்டரின் போது ராஜு மற்றும் வீரு காஷ்யப் இருவருக்கும் கால்களில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த நிலையில் அவர்களைக் கைது செய்த காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஜனவரி 2ஆம் தேதி இரவு, ஒரு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/child-ins-2026-01-03-23-43-45.jpg)
தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டு, சிகந்திராபாத்தில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அந்தச் சிறுமி அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த நிலையில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், இரு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளோம். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/siren-police-2026-01-03-23-43-09.jpg)