A shocking incident in Chennai Photograph: (police)
மது போதையில் மனைவியை கொன்ற நபர் சடலத்துடன் உறங்கி விட்டு காலையில் எழுந்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சத்யராஜ். கார் ஓட்டுநர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி ரோஸ்மேரி. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சத்யராஜ் அடிக்கடி அவரிடம் சண்டை போட்டு வந்துள்ளார். அதேநேரம் மதுவிற்கு அடிமையான சத்யராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சத்யராஜ் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வயரை எடுத்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மது போதையில் தான் என்ன செய்தோம் என்பதை கூட அறியாமல் உயிரிழந்த மனைவியின் சடலத்தின் அருகிலேயே சத்யராஜ் படுத்து உறங்கி உள்ளார். பின்னர் விடியற்காலை எழுந்தும் மதுபோதை தெளிந்த பிறகுதான் தான் மனைவியை கொலை செய்தது அவருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மனைவியை கொலை செய்துவிட்டு கொலை செய்ததே தெரியாமல் சடலத்துடன் படுத்து உறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us