Advertisment

அதிர்ச்சி முடிவெடுத்த பள்ளி மாணவன்?- விசாரணையில் திடீர் திருப்பம்

624

A schoolboy made a shocking decision? - A sudden turn in the investigation Photograph: (POLICE)

பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு  முயன்ற சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள கனகம்மாசத்திரம் அருகே  பள்ளி மாணவன்  பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு  முயன்ற சம்பவத்தில் திடீர் திருப்பமாக  முன் விரோதத்தால், பள்ளி மாணவன் வாயில்  பூச்சி மருந்து ஊற்றி கொலை முயற்சி நடைபெற்றதாக மாணவன் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு மாற்றம் செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் ராமு (17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில்  கடந்த 7ம் தேதி  விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் இருந்த பள்ளி மாணவனை குடும்பத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில்  உடல்நிலை சற்று  சுய நினைவு திரும்பிய  நிலையில் தன்னை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மோகன், பிச்சைமுத்து, ராஜா,சரவணன், சாமிதாஸ், ரமேஷ் ஆகியோர் சுற்றி வளைத்து வாயில் பூச்சி மருந்து  ஊற்றி கொலை முயற்சி செய்ததாக போலீசாருக்கு வாக்குமூலம் கொடுத்தார். ஜோதி மற்றும் அவரது உறவினர்கள் இடையில் உள்ள நில தகராறு காரணமாக  கொலை முயற்சி செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வழக்கு மாற்றம் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் எனது மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை கொலை செய்ய முயற்சி செய்த நபர்களை உடனடியாக கைது வேண்டும் என்று  மாணவனின் தாய் ஜெயந்தி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அவருக்கு புகார் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவனைக் கொலை செய்ய முயற்சி என்று அவரது தாயார் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hospital police school student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe