திருப்பத்தூரில் ரயில் நிலையத்திலிருந்து மண்ணுளிப் பாம்பு கைப்பற்றப்பட்டு வனத்துறையிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மண்ணுளிப் பாம்பு ரயில்வே டிராக்கில் ஊர்ந்து செல்வதாக ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் அங்கு வந்த ரயில்வே போலீசார் மண்ணுளிப் பாம்பை பிடித்து அதை ஒரு சாக்குப் பையில் அடைத்து வைத்தனர். பின்னர் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சுமார் இரண்டரை கிலோ எடை கொண்ட அந்த மண்ணுளிப் பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்ணுளிப் பாம்புகள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி அதைக் கடத்த முயலும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிடிபட்டது கடத்தி செல்ல முயன்ற பொழுது தப்பிய மண்ணுளி பாம்பா அல்லது அந்த பகுதியில் இயற்கையாகவே சுற்றித் திரிந்த மண்ணுளி பம்பா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.