Advertisment

“யாருக்குமே எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி...” - பட்டியலிட்ட இ.பி.எஸ்.!

eps

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன. கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட +2 மாணவர் பரிதாபாமாக உயிரிழப்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை. தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை,

Advertisment

சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை தேடும் போலீசார். நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி என தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்தத் தவறியதற்கு  முதல்வரின் அரசு வெட்கப்பட வேண்டும்.

Advertisment

விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பகல், இரவென எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது. சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ?. ஆட்சியில் இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்ப்ட்டுள்ளார். 

admk Edappadi K Palaniswamy law and order mk stalin tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe