A ration shop employee's bizarre decision Photograph: (ERODE)
கடன் தொல்லை காரணமாக ரேஷன் கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஈரோடு ரயில்வே காலனி, விக்னேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவின் ரிச்சர்ட் (34). இவர், சங்கு நகர் பகுதி ரேஷன் கடையில் காசாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சினேகாஜாய் (26). குழந்தை இல்லை. விவின் ரிச்சர்டுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் அவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாததால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சினேகாஜாய், கோழிக்கோடு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், விவின் ரிச்சர்ட் விஷம் குடித்துவிட்டு, சாஸ்திரி நகரில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே விவின் ரிச்சர்ட் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow Us