செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள ப்ளூ பீச் பகுதியில் சுத்தமான கடற்கரை என்பதால் சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணி கூட்டம் படையெடுத்த வண்ணமாக இருந்து வந்தது.
சமீபகாலமாக கோவளம் கடற்கரை ப்ளூ பீச் பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. காரணம் கடற்கரை ஓரமுள்ள கடல் நீரில் டன் கணக்கில் குப்பை கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கடல் நீரில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர், தினம் தினம் டன் கணக்கில் குப்பைகள் சேர்வதால் அசுத்தமான தண்ணீரும் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு முகச்சுழிவையும் ஏற்படுத்தியது. இதனால் கடல் நீரில் குளிக்க முடியாமல் ஏமற்றுடன் திரும்புகின்றனர்.
சமீபத்தில் பெய்த மழையின் போது குப்பை கழிவுகள் முட்டுக்காடு முகத்துவாரம் மூலமாக கடல் நீரில் கலந்தது அதில் பல டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கழிவுகள் அடித்து வந்து ப்ளூ பீச் கடற்கரையில் உள்ள கடல் நீரில் கலந்ததால் குப்பைக் கழிவுகள் அனைத்தும் ப்ளூ பீச் கரை ஓரம் கரை ஓரங்கி கடல் அலையில் சிக்கிக்கொண்டது.
இதனால் தினம் தினம் முட்டுக்காடு சுற்றுலாத்துறை சார்பில் கடல் நீரிலிருந்து வெளியேறும் குப்பைகளை சுத்தம் செய்து வந்தாலும் கடல் நீரில் இருக்கும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த முடியாமல் கடல் அலைகளோடு அலைகளாக கடல் நீரிலேயே மிதந்து வருகின்றது. இதனால் கடலில் வாழும் அரிய வகை உயிரினங்கள், மீன்கள் அரிய வகை ஆமைகள் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
கோவளம் கடற்கரையில் 10 கிலோ எடை கொண்ட அரிய வகை ஆமை ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கயது இதே போல பல்வேறு ஆமைகள் உயிர் இறந்துள்ளதாகவும் அதனை அங்கங்கே பள்ளம் தோண்டி புதைத்து வருவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை முகத்துவாரம் மூலம் கடல் நீருக்கு செல்லாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Follow Us