'A pleasant surprise in January; AIADMK will be the only party from now on' - Sengottaiyan assures Photograph: (tvk)
இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் பேசுகையில், ''எங்களுடைய பொதுச்செயலாளர் தலைமையிலும், சமீபத்தில் எங்களுடன் இணைந்த தீர்மானக் குழுவின் தலைவராக இருக்கும் செங்கோட்டையன் முன்னிலையிலும் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். அடுத்த மூன்று மாதங்களில் நடக்க வேண்டிய தேர்தல் பணி குறித்து, எவ்வாறெல்லாம் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்? என்னென்ன விதத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்? என்னென்ன சவால்கள் நம் முன்னே இருக்கிறது? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எந்த அளவிற்கு நமக்கு பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. அதை முடக்க திமுக என்னவெல்லாம் செய்கிறது? அதை எதிர்கொண்டு எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் போன்ற அனைத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 'இனிமேல் அதிமுக கிடையாது தமிழக வெற்றிக் கழகம் தான் அதிமுகவின் முகம். வரும் ஜனவரி மாதம் தவெகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளேன். அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பலரை தவெகவில் இணைக்க முயற்சிப்பேன். தவெக இன்னொரு அதிமுகவாக மாறும். தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையது' என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow Us