தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் மோன்தா புயல் உருவானது. இந்த புயல், சென்னையில் கரையில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 28ஆம் தேதி இரவு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கர்நாடகாவுக்கு தெற்கே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இந்த மோன்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

Advertisment

மோன்தா புயல் உருவாகி கரையை கடந்த  நிலையிலும் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடந்த அக்டோபர் மாதத்தை விட வடகிழக்க பருவமழை, சுமார் 230மிமீ மழை அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வங்கக்கடலில் மீண்டும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு மியான்மர், வடக்கு அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியாக நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.