வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வரதரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாய தம்பதிகளான ஜெயச்சந்திரன் (32) மோனிகா தம்பதியினர். இவர்களின் 4 வயது மூத்தமகள் கீர்த்திஷா (4) பரதராமி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் LKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (05.11.2025) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குபள்ளி பேருந்தில் வந்த சிறுமி கீர்த்திஷா வரதரெட்டிப்பள்ளியில், பள்ளி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.

Advertisment

அப்போது சிறுமி பேருந்தின் முன்பக்கம் கடந்து செல்ல முயன்றதாகவும் அதை கவனிக்காத பள்ளி பேருந்து ஓட்டுநர் தமிழ்செல்வன் (30) பேருந்தை கவனக்குறைவாக திருப்பியுள்ளார் (U TURN) அப்போது எதிர்பாரதவிதமாக சிறுமி கீர்த்திஷா அதே பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் பேருந்து ஓட்டுநர் தமிழ்செல்வன் தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து வந்த பரதராமி காவல்துறையினர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பரதராமி காவல்துறையினர் பேருந்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுநர் தமிழ்ச்செல்வனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

தான் இறங்கிய பள்ளி பேருந்திலேயே சிக்கி பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.