திருவள்ளூரில் ஒரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியின் போது இந்த வீட்டில சோறுக்கு பஞ்சம் என எழுதப்பட்டிருந்த ஏழைக் குடும்பத்தினரின் வீட்டினை புதுப்பித்து கொடுத்த திமுக மாவட்ட துணைச் செயலாளர் பொதுமக்கள் பாராட்டு 

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஒரணியில் தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியின் சார்பில் ஏழைகளின் குறைகளை கேட்பதும் தமிழக அரசின் திட்டங்கள் ஏழைகளை சேர்ந்திருக்கிறதா என்பதை கேட்டு அறிந்து புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இதைத் தொடர்ந்து தமிழக முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என அனைவரும் வீடு வீடாகச் சென்று ஒரணியில் தமிழ்நாடு என்பதன் விளக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

அதுபோல் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் டாக்டர் வி.சி .ஆர் குமரன் தலைமையில் திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற ரணிகள் தமிழ்நாடு நிகழ்வின்போது கணவனால் கைவிடப்பட்ட குடும்பத் தலைவி, தனது தாய், இரண்டு பெண் பிள்ளைகளுடன் கஷ்டப்பட்டு வருவதை இந்த வீட்டில் சோறுக்கு பஞ்சம் யாரும் தங்க வேண்டாம் என எழுதப்பட்டிருந்ததை பார்த்து உடனடியாக அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்ததுடன் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் இடம் கொண்டு சேர்த்து அவர்களின் ஆலோசனையின் பேரில் மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

Advertisment

S3

இந்த நிலையில் ஏழை குடும்பத்தினரின் பழமையான வீட்டின் ஓடுகளை புதிதாக மாற்றி கொடுத்ததுடன் வீட்டிற்கு இரண்டு ஜன்னல்கள் கதவு உள்ளிட்டவற்றை புதிதாக மாற்றி வீட்டிற்கு வர்ணம் பூசி புத்தம் புதிய வீடு போல அலங்கரித்து அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் புத்தம் புதிய ஆடை கொடுத்து மகிழ்வித்தார்

மேலும் வீட்டிற்கு பால் காய்ச்சி வீட்டில் குடியேறிய அக்குடும்பத்தினர் மாவட்ட துணைச் செயலாளர் ஈ சி ஆர் குமரனுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்ததுடன் இந்த வீட்டில் சோறுக்கு பஞ்சம் யாரும் தங்க வேண்டாம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தங்கள் குடும்பத்திற்கு ஒரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி மூலம் உதவி செய்த தமிழ்நாடு முதலமைச்சரின் புகைப்படத்தினை சுவற்றில்நன்றி தெரிவித்தனர்