சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அருகே கிணற்றில் எலும்புக் கூடாக சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்பொழுது விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. போலீசார் பாதுகாப்புடன் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அருகே உள்ள சந்திரா கார்டன் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/29/a5033-2025-08-29-15-56-19.jpg)
அதற்காக கிணற்றைச் சுத்தம் செய்தபோது கிணற்றில் ஒரு ஆண் சடலம் எலும்புக் கூடாக மிதந்தது. உடனடியாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.