காதல் விவகாரத்தில் சண்டையை விலக்கச் சென்றவருக்குக் கத்திக்குத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் அருகே காதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். அப்போது இரு தரப்பினரையும் தினேஷ் என்பவர் சமரசம் செய்ய முயன்றுள்ளார். அச்சமயத்தில் முகமது ஆதாம் என்பவர் வீசிய கத்தி தினேஷ் மீது பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் நேரில் பார்த்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கத்தி குத்து ஏற்பட்ட தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தினேஷ் திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் முகமது ஆதாம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மேலும் அவருடன் வந்த உறவினர்கள் இருவரைப் பிடித்து திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.