தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் ராஜேஸ்வரன் (32). வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த இவர், தனது மனைவி, ஒரு வயது குழந்தை மற்றும் உறவினர்களான பெண்கள், குழந்தைகளுடன் இன்று (08-11-25) திருச்சிக்கு ஒரு காரில் சென்றுவிட்டு புதுக்கோட்டை வழியாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
ஆலங்குடி கடந்து சிக்கப்பட்டி கிராமத்தில் கார் சென்ற போது, ஒரு லாரியை முன்னால் செல்லவிடாமல் ஒரு பைக்கிள் சென்ற போதை ஆசாமி தனது பைக்கை அங்குமிங்கும் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரிக்கு பின்னால் வந்த ராஜேஸ்வரன் ஓட்டி வந்த கார் லாரியை முந்திச் சென்ற போது போதை இளைஞர் காரை வழிமறித்து பைக்கை ஓட்டியதுடன் காரில் மோதுவது போல சென்றுள்ளார். கார் சிக்கப்பட்டடி பயணி நிழற்குடை அருகே வந்த போது அதே ஊரைச் சேர்ந்த போதை இளைஞர் தமிழ்செல்வன் மகன் சிவபாலன் (23) காருக்கு முன்னால் பைக்கை நிறுத்தி கார் கண்ணாடிகளை தட்ட ரகளை செய்துள்ளார்.
இதனால் காரில் இருந்த பெண்கள் குழந்தைகள் அச்சமடைந்து கதறியுள்ளனர். தொடர்ந்து காரில் கட்டப்பட்டிருந்த திமுக கொடியை கிழிக்க முயன்ற போது காரில் இருந்து இறங்கிய ராஜேஸ்வரன் மீது கல்லை தூக்கி கார் மீது வீச முயன்றுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரும் வேளையில், பீர் பாட்டிலால் ராஜேஸ்வரன் தலையில் அடித்துள்ளார். இதில் ராஜேஸ்வரனின் தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ராஜேஸ்வரன் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போனது. அதோடு போதை ஆசாமி சிவநேசன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து ராஜேஸ்வரன் வடகாடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரனை செய்துள்ளனர். ராஜேஸ்வரனும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் கூறும்போது சிக்கப்பட்டி சிவநேசன் ஏற்கனவே இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது வாகனத்தை முந்தி எந்த வாகனமும் போனால் இது போல பிரச்சனை செய்துள்ளார். ராஜேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிவநேசனை தேடி வருகிறோம் என்றனர். போதை ஆசாமிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/ra-2025-11-08-22-58-28.jpg)