வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற ஜனவரி 6ஆம் தேதியை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு கனமழையும், ஓரிரு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை தொடரும் எனவும் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.