சேலம் மாவட்டம் திருப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). இவர் சென்னிமலையில் உள்ள கோழிப்பண்ணையில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தார். இத்தகைய சூழலில் தான் ராஜேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டல் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், ராஜேஷ்க்கும், லோகேஸ்வரிக்கும் இடையே கடந்த 3 மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், லோகேஸ்வரி தனது குழந்தைகளுடன், தனது அம்மாவின் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து, மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்து வந்த ராஜேஷ், நேற்று முன்தினம் (09.09.2025) கோழிப்பண்ணையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஷின் சடலத்தை மீட்டு, பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து, ராஜேஷின் தம்பி கார்த்தி அளித்த புகாரின் பேரில், வெள்ளோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.