A lone wild elephant in the city; the public was shocked Photograph: (elephant)
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளுக்கு காட்டு யானைகள் குறிப்பாக ஒற்றை காட்டு யானைகள் படையெடுக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் வெள்ளிமலைபட்டினம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்த நிலையில் ஊர் மக்கள் ஓட்டம் எடுத்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சாஸ்தாபுரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒற்றைக் காட்டு யானை வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் யானையின் பின்புறமாக சத்தமிட்டபடி அதை விரட்ட முயன்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.