கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு காட்டு யானைகள் படையெடுக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. மேலும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் வெள்ளிமலைபட்டினம் பகுதியில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது.

Advertisment

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை தள்ளி சேதப்படுத்தியது. யானையின் செயல்களை கூலாக அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். திடீரென காட்டு யானை முதியவர் ஒருவரை தாக்க முயன்ற நிலையில் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானை நடமாட்டத்தை கண்காணித்து அதனை வனத்திற்குள் கொண்டு செல்லும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவ த்தால் அந்த பகுதி மக்கள் வீதியில் உறைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.