வங்கி ஊழியர் உள்ளிட்ட இரண்டு பேரை கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது.

Advertisment

திருவள்ளூர் ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவர் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர்களான கேசவமூர்த்தி, சுகுமார் ஆகியோருடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே பாபால்ஸுக்கு கடந்த 16ஆம் தேதி சென்றார். அதனை தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பினர். திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

Advertisment

பார்த்திபன், இருசக்கர வாகனத்தை மோதுவது போல் வந்ததால் பார்த்திபன் மற்றும் சுகுமார் ஆகியோர், ஏன் இடிப்பது போல் வேகமாக வருகிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். இதையடுத்து இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சாலையில் இருந்த கூரான கற்களை எடுத்து சரமாரியாக சுகுமார், பார்த்திபன், கேசவமூர்த்தி மீது அடித்தனர். இதில் மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பார்த்திபன் சம்பவிடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இதையறிந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவிடத்திலேயே உயிரிழந்த பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் அதேபோல் காயங்களோடு இருந்த சுகுமார் மற்றும் கேசவமூர்த்தி ஆகிய இரண்டு பேரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. ஆனால், மருத்துவமனையில் சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேசவமூர்த்திக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மணவாளநகர் காவல்துறையினர் வழக்கு பதிந்து மூன்று தனிப்படைகள் குற்றவாளிகளை தேடினர்.

Advertisment

போலீசார் விசாரணையில் கொலை செய்த நபர்கள் வினோத் குமார், ஜோதிஷ், ஜவகர், நீலகண்டன் ஆகிய 4 தான் எனத் தெரியவந்தது. கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் மணவாளநகரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் மதில் சுவர் மீது ஏறி தப்பி ஓட முயன்ற நீலகண்டனுக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவ தினத்தன்று குற்றவாளிகளில் இரண்டு பேர் கஞ்சா போதையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.