A gang of thieves caught up by police in the Reels craze
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது கருணை. இவர் தங்களுடைய வீட்டு வேலைக்காக அலிமத்து நிஸ்மியா என்ற பெண்ணை சேர்த்துள்ளார். அங்கே வேலை செய்த அந்த பெண், வீட்டில் நகை பணம் எங்கு உள்ளது என்பதை வேலைக்கு செல்ல சில நாட்களிலேயே தெரிந்து கொண்டார். இவர் ஏற்கனவே பணிபுரிந்த சில இடங்களில் திருடியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ஆட்கள் யாரும் வீட்டில் இல்லாத போது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சுவிட்சை ஆப் செய்து விட்டு இவர் மற்றும் இவரது தோழியான பர்வீன் பானு ஆகிய இருவரும் சேர்ந்து 22 பவுன் நகையை திருடி உள்ளனர். இது பற்றி கீழக்கரை காவல் நிலையத்தில் முகமது கருணை புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் இவர்களிடம் பல்வேறு விசாரணைகள் நடத்திய போது, தங்களுக்கும் நகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நாங்கள் எடுக்கவில்லை எங்களை வேண்டுமென்றே பழி சுமத்துகிறார்கள் என்றும் புகார் அளித்தவர் மீது பாலியல் புகார் கூறினர். இதனால் தங்களையே அசிங்கப்படுத்துகின்றனர் என்று நகை போனால் போகிறது என்று விட்டுவிட்டனர். மேலும், திருடிய கும்பல் தெனாவட்டாக வலம் வர, விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக, நடைபெற்ற திருமணத்தில் முகமது கருணை வீட்டில் திருடிய நகையை தாங்கள் கழுத்தில் போட்டு இரு பெண்களும் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இதனை எதார்த்தமாக கவனித்து கடுப்பான கீழக்கரை சார்பு ஆய்வாளர்கள் வீரகணேஷ் மற்றும் சல்மோன் மீண்டும் அவர்களை பிடித்து தங்களுக்கே உரிய பாணியில் விசாரித்தனர். அப்போது, நகையை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கீழக்கரை முத்தூட் பைனான்ஸ் மற்றும் ராமநாதபுரம் நகைக்கடை, சிக்கல் நகைக்கடை, கீழக்கரையில் உள்ள ஒரு சில நகைக்கடைகளில் 22 பவுன் நகையையும் அடகு வைத்து இரண்டு டியோ பைக் மற்றும் ஒரு ஈகோ கார், விலை உயர்ந்த கேமரா வாங்கியதும் குற்றாலம், கொடைக்கானல் என்று ஜாலியாக ஊர் சுற்றியதும் தெரிய வந்தது.நகைகளை திருடி ரீல்ஸ் மோகத்தால் அலிமத்து நிஸ்மியா, பர்வீன் பானு இதற்கு உடந்தையாக இருந்த பர்வீன் பானு கணவர் கௌதம் ராஜ் அவர்களாகவே மாட்டிக் கொண்டு கம்பி எண்ணி வருகின்றனர்.
Follow Us