கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பள்ளம் என்ற இடத்தில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு புலம்பெயர் தொழிலாளியை, உள்ளூரைச் சேர்ந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து உள்ளூர் மக்களும் காவல்துறையினரும் அந்த தொழிலாளியை பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட ராம் நாராயண் பாகேல் கேரளாவில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர், வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது.

Advertisment

இதற்கிடையில் பால்கேவின் குடும்பத்தினர், பால்கேவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளதாகக்  கூறி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று  அவரது சகோதரர் சசிகாந்த் மற்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும் குடும்பத்தினர் 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் கோரியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இளைஞர் அமைப்பு தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக, அந்த நாட்டில் கலவரம் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒரு கும்பல், ஒரு இந்து இளைஞரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்து நடு வீதியில் தீயிட்டு கொழுத்தினர். இதனால், அங்கு மத மோதல்கள் ஏற்பட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து இளைஞரை கொடூரமாகத் தாக்கி தீயிட்டு கொழுத்திய சம்பவத்திற்கு இந்தியாவிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment