A fox entered the village - a shocking incident Photograph: (kerala)
கேரள மாநிலம் கண்ணூரில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை நரி ஒன்று கடித்துக் குதற முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே நாடு முழுவதும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடிபடும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே கேரளாவில் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகமாகி வந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில் அதே கேரளாவில் சிறுவன் ஒருவனை நரி ஒன்று கடித்து இழுக்க முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் வெளியே குழந்தைகள் குழுவாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் வெளியே அமர்ந்திருந்த சிறுவன் ஒருவனை நோட்டமிட்டு நரி ஒன்று சாதுர்யமாக பதுங்கி சென்று சிறுவனின் காலை கடித்து இழுத்தது. ஆனால் சுற்றியிருந்த சிறுமிகள் நரியை அடித்து விரட்டினர். இந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.