a family in turmoil on simple fight between husband and wife
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள அனேகல் பகுதியில் வசித்து வந்தவர் தீபந்த் சபர் (31). இவரது மனைவி மஞ்சுளா சபர் (27). இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் பொம்மசந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். காதல் திருமணம் கொண்ட இவர்களுக்கு, அடிக்கடி சிறு சிறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இவர்களுக்குள் அவ்வப்போது வாக்குவாதம் மற்றும் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம் போலக் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இவர்களுக்குள் சாதாரண விஷயத்திற்காகத் தகராறு ஏற்பட்டுள்ளது. சாதாரண வாக்குவாதமாக இருந்த நிலையில், சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரத்தில் இருந்த தீபந்த், மஞ்சுளாவைத் தாக்கியுள்ளார். இதில், மஞ்சுளா மயங்கி கீழே விழுந்துள்ளார். வழக்கம் போலச் சண்டை தானே என்று தீபந்த் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
பின்னர், சிறிது நேரத்திற்குப் பிறகு விழுந்து கிடந்த தனது மனைவியை எழுப்பியுள்ளார். அப்போது தான் அவருக்கு மஞ்சுளா உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன தீபந்த், கதறி அழுதுள்ளார். இதையடுத்து, தீபந்த் ஒரிய மொழியில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பின்னர், மஞ்சுளாவிற்கு நெற்றியில் குங்குமம் பூசிக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பின்னர், தனது மனைவியைப் பிரிந்து, தன்னால் வாழ முடியாது என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலையில், இந்த தம்பதிகள் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் சன்னல் வழியாகப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தம்பதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் வேலை நிமித்தமாக பெங்களூரில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
Follow Us