தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி செம்பேடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த வேலு என்பவருக்கும் இடையே பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் பார்த்திபன் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாண்டியன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வேலு என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பது தொடர்பான தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.