A dispute over a lemon - two family members violently attacked each other Photograph: (kovai)
கோவையில் புதிய காருக்கு திருஷ்டி கழித்த எலுமிச்சை பழத்தை பக்கத்து வீட்டை நோக்கி தூக்கி வீசியதில் வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சம்பவம் தொடர்பாக செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ளது பெரிய புதூர். அங்கு வசித்து வரும் பாலன் என்பவர் புதிதாக ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளார். நல்ல நேரம் பார்த்து புதிய காருக்கு திருஷ்டி கழிக்க வேண்டும் என முடிவெடுத்து காரின் நான்கு சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சம் பழங்களை வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டுள்ளார்.
திருஷ்டி சுற்றிய அந்த எலுமிச்சை பழங்களை பக்கத்து வீட்டின் அருகே போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் திருஷ்டி கழித்த எலுமிச்சை பழத்தை எங்கள் வீட்டின் முன் ஏன் போட்டீங்க? செய்வினை வைக்கிறீங்களா?' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதல் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காரமடை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருஷ்டி எலுமிச்சை பழத்தால் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us