புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகில் உள்ள பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மும்மூர்த்தி, விநாயகம், மணிகண்டன், மணி ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் 9ஆம் தேதி மதியம் ஒரு படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். அந்த படகில் சென்ற மீனவர்கள் 4 பேரும் நேற்று வரை கரை திரும்பாததால் கிராமத்தில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் கடற்கரையில் கண்ணீரோடு காத்திருந்தனர்.
இந்த நிலையில், கடலோர காவல் மற்றும் போலீசார் அனுமதியுடன் சக மீனவர்கள் 2 நாட்களாக படகுகளில் கடலுக்குள் சென்று படகுடன் காணாமல் போன 4 மீனவர்களையும் தேடி வந்தனர். இன்று 11 ந் தேதி மதியம் சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் பழுதான படகுடன் 4 மீனவர்களும் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குள் வந்து வலை வீசி இழுத்துக் கொண்டிருந்த போது படகில் இயயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அதனை சரி செய்ய போராடியும் முடியவில்லை. அதே நேரத்தில் படகை நிறுத்தி வைக்க கடலுக்குள் வீசப்பட்ட நங்கூடரமும் கயிறு அறுந்து போனதால், காற்றின் வேகத்தில் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. காற்றின் வேகத்தில் படகு நகர்ந்து கொண்டே சென்றது. எப்படியும் இந்த வழியாக வரும் மீனவர்கள் எங்களை பார்த்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இரவு பகலாக 2 நாட்களாக காத்திருந்தோம் என்று மீனவர்கள் கூறியுள்ளனர். நடுக்கடலில் பழுதான படகுடன் தவித்த மீனவர்களையும் படடகையும் தேடிச் சென்ற மீனவர்கள் தங்கள் படகும் மூலம் கரைக்கு கொண்டு வந்துள்ளனர். நடுக்கடலில் மீனவர்களுக்கு நடந்த சோதனையால் கரையில் இருக்கும் உறவினர்களும் பதறிப்போய்விட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/11/fis-2026-01-11-14-46-01.jpg)