Advertisment

சாலையின் குறுக்கே வந்த மாடு; வாகனம் கவிழ்ந்து சிறுமி உள்பட இருவர் காயம்!

pdu-coconut-tree-1

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த தேங்காய்களை வியாபாரி அதே பகுதியில் வைத்து உரித்து வெளியூர் கொண்டு செல்ல நேற்று (11.09.2025) சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இவ்வாறு தேங்காய் ஏற்றிய சரக்கு வாகனத்தைத் தஞ்சாவூர் மாவட்டம் துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவா மகன் போத்திச்செல்வன் (30) ஓட்டியுள்ளார்.

Advertisment

இந்த வாகனத்தில் தேங்காய் ஏற்றிய வலசைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் மனைவி (வயது 23), துர்காதேவி, ராமலிங்கம் மகள் மணிமேகலை (வயது 17) மற்றும் ரம்யா ஆகியோர் சரக்கு வாகனத்தின் உள்ளே இருந்துள்ளனர். தேங்காய் பாரம் ஏற்றிய சரக்கு வாகனம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் சென்றது. அப்போது குறுக்கே மாடு வந்ததால் அந்த மாடு மீது மோதாமல் இருக்க வாகனத்தைத் திருப்பிய போது மரத்தில் மோதுவது போலப் போனதால் மீண்டும் சாலைக்குத் திரும்பிய போது தேங்காய் ஏற்றிய சரக்கு வாகனம் சாலையிலேயே கவிந்து விபத்து ஏற்பட்டது. 

pdu-coconut-tree

இந்த விபத்தில் மணிமேகலை, துர்காதேவி ஆகியோர் காயமடைந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரக்கு வாகனத்தில் இருந்த தேங்காய்கள் சாலை ஓரம் முழுதும் சிதறிக் கிடந்தது. சம்பவம் இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் பொதுமக்கள் வாகனத்தை மீட்டனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

pudukkottai incident van coconut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe